Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு…. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் கல்லூரி நிர்வாகம் தனது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. அதன்படி மதுரையில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மதுல்லாஹ் ஜார்கண்டில் காலை நடைப்பயிற்சியின் போது தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொல்லப்பட்டதாக இருக்கிறது.

மேலும் “எங்கள் சமூகத்தில் உணர்ச்சிவசப்பட்ட சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் எங்களை குற்றம் சாட்டும் சந்தர்ப்பத்திற்காக பாஜக காத்திருக்கிறது” எனவும்  அவர் பேசியது போல அந்த வீடியோவில் உள்ளது. அதே போல் தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோருக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையக பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததாகவுகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக, கோவை ரஹ்மத்துல்லா என்பவர் திருநெல்வேலியிலும், ஜமால் முகமது உஸ்மானி தஞ்சாவூரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு  வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்த புகாரை முழுமையாக விசாரிக்கவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |