கர்நாடகாவின் ஹிஜாப் தடை குறித்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் உள் விவகாரங்கள் என்றும் இதில் தீங்கிழைக்கும் கருத்துக்கள் இருக்கக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நோக்கங்களுடனான பதில்கள் வரவேற்கப் படுவதில்லை. மேலும் இது நீதிமன்றத்தின் பரிசீலனை கூறிய விஷயம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந்தியாவை அறிந்தவர்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்வார்கள். இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் இஸ்லாமிய பெண்கள் மற்றும் சிறுமிகள் ஓடுக்கப்படுவதாகவும், மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரிஷாத் ஹூ சைன் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமிய சிறுமிகள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதாகவும் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இயக்கத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டும். எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம், காஷ்மீர் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகள் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹிஜாப் தடை உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தற்போது இந்தியாவின் அறிக்கை அமைந்துள்ளது.