தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தன்னுடைய திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் இருந்து விலகவில்லை. தற்போது கனெக்ட் என்ற பேய் படத்தின் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியயுள்ளார். இதில் சத்யராஜ், வினய், பாலிவுட் நடிகர் அனுபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டார். அதில் தன்னுடைய சினிமா பயணம் தொடர்பிலும் தனக்கு வந்த கசப்பான அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்திருந்தார்.
மேலும் அப்போது நடிகை மாளவிகா மோகன் குறித்து மறைமுகமாக நயன்தாரா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு படத்தில் ஹாஸ்பிடலில் இருக்கும் காட்சியில் நான் அதிகமாக மெக்கப்பொடு இருந்ததாக ஒரு நடிகை பேட்டியில் கூறியிருந்தார். எனக்கு அந்த படத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியும் என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நயன் குறித்து யார் கூறினார் என தேடி பார்த்த போது மாளவிகா முகநூல் பேட்டியிள் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு படத்தில் ஹாஸ்பிடலில் இருக்கும் காட்சியில் அதிகம் மேக்கப்போடு இருந்தார். அப்படி யாராவது சீரியஸான நிலைமையில் இருப்பாங்களா? என்று நயனை கலாய்த்தது சிக்கி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நயன் ரசிகர்கள் சரியான பதிலடி என்றும், மாளவிகா மூக்கை உடைத்த நயன் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்
Slippershot To Malavika🤡#Nayanthara 🥰
— 𝘽𝙧𝙪𝙘𝙚 𝙒𝙖𝙮𝙣𝙚 (@AjithBruceOffl) December 21, 2022