Categories
தேசிய செய்திகள்

ஹாலிவுட் படங்களை மிஞ்சிய மாஸ்டர் பிளான்…” 90 லட்சத்துக்கு இடம் வாங்கி திருட்டு”…வெளியான உண்மை சம்பவம்..!!

திருடுவதற்காக கொள்ளையன் ஒருவன் 90 லட்சத்திற்கு வீடு வாங்கி சுரங்கப்பாதை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து 200 கிலோ வெள்ளி பொருட்கள் அடங்கிய நகைப்பெட்டி திருடப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டியிலிருந்து வெள்ளி பொருள் திருடு போனதாக கூறியிருந்தார். மேலும் அவர் தன் வீட்டின் அருகே ஒரு சுரங்கப் பாதை அமைந்துள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் திருடர்கள் முதலில் மருத்துவரின் பங்களாவிற்கு அருகில் உள்ள காலியான இடத்தை 90 லட்சத்திற்கு வாங்கியதாகவும் பின்னர் வெள்ளிப் பெட்டியை திருட அடித்தளத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக சுரங்கப்பாதை அமைத்து வந்தது தெரியவந்தது. மருத்துவர் வீட்டில் இருந்தால் வெள்ளி பெட்டி எவ்வாறு அந்த கொள்ளையர்களுக்கு தெரியவந்தது என்றும், இது சம்பந்தமாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர் இடத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |