வடகொரிய அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்த ஹாலிவுட் பாணியில் டிரைலர் காட்டியுள்ளது.
வடகொரிய அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த சோதனை குறித்து வட கொரிய அரசு தொலைக்காட்சியில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் போன்று செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டு அதிலிருந்து கருப்பு நிற கண்ணாடியுடன், தோல் ஜாக்கெட் அணிந்து கொண்டு அதிபர் கிம் ஜாங் உன் வெளியே வந்துள்ளார்.
அது மட்டுமின்றி அவரது வலது புறமும், இடது புறமும் ராணுவ உயரதிகாரிகள் வந்துள்ளார்கள். இதற்கு பின்னணி இசையும் வீடியோவில் இருந்துள்ளது. அவ்வாறு நடந்து வந்த கிம் ஜாங் உன் கேமராவை நேரடியாக பார்த்து “இதை நாம் செய்வோம்” என்றும் கூறியுள்ளார்.