நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹாலிவுட் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், லாலா லேண்ட், ரயன் காஸ்லிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான தி கிரே மேன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தி கிரே மேன் என்ற படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தி கிரே மேன் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ள நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஜூலை 22-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள சில இடங்களில் தி கிரே மேன் படத்தின் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது. இதில் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டுள்ளார். இவர்கள் 3 பேரும் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.