Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஹாக்கி போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

தென் மண்டல அளவிலான ஹாக்கி   போட்டி கே. வி. எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான  ஹாக்கி போட்டி லயன்ஸ் கிளப் டான் சார்பில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 11 பள்ளிகளை  சேர்ந்த  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மதுரையை சேர்ந்த இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அருப்புக்கோட்டை சேர்ந்த எஸ். பி. கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சந்திரமோகன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Categories

Tech |