Categories
மாநில செய்திகள்

ஹலோ! ஹ்ம்ம் சொல்லுங்க…. தடுப்பூசி போடும்போது இப்படியா…? கொந்தளித்த மக்கள்…!!!

இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள  பெறுகவாழ்ந்தான் அருகே காந்தாரி கிராமத்தில் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது தடுப்பூசி செலுத்தும் பெண் செவிலியர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

பணி நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக தடுப்பூசி செலுத்தும் இத்தகைய செவிலியர்கள் தடுப்பூசி மாற்றி செலுத்தும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு எந்த விதமான தடுப்பூசி போடப்பட்டது? என்று குழப்பம் ஏற்படும். எனவே செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும் என்றும், சுகாதார பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பது கிராம மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |