மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் அதற்கு இணையாக இன்று அஷ்டமி சப்பரம் வீதி உலாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடம் தோறும் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும், அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.
#WATCH | A large number of people take part in the Madurai Meenakshi Amman Temple 'Margazhi Ashtami Car Festival' in Tamil Nadu pic.twitter.com/NjJ7RqkBAH
— ANI (@ANI) December 27, 2021
இதனை தொடர்ந்து ஹர ஹர சங்கரா, சிவ சிவ சங்கர… என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பர தேரோட்டத்தை தொடங்கினர். இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து சென்றனர். வழி நெடுகிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக வந்து பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக இன்று நடந்த அஷ்டமி சப்பர வீதி உலாவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.