Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம்”…. வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ…!!!!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்த் திரைப்படம் ஓ மணப்பெண்ணே.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யான் தற்போது நடித்துள்ள திரைப்படம் டீசல். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். ஆக்சன் ரொமான்ஸ் ஜோனரில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். தற்பொழுது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றயடுத்து மேக்கிங்  கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கின்றது. ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளன்று வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Categories

Tech |