இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னரும் ராஜ குடும்பத்துடனான உறவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதாவது முதலில் ஒரு நேர்காணல், அடுத்து ஒரு நெட்பிக்ஸ் தொடர், அதனை தொடர்ந்து ஒரு புத்தகம் என ராஜ குடும்பத்தை அவமதிப்பதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரி, மேகனுடைய நெட்பிலிக்ஸ் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
இவ்வாறு ராஜ குடும்பத்தை அவமதிக்கும் ஒரு தொடரை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பார்த்தால் அவர்கள் netflix தொடரை தற்போது பிரபலமாகிவிட்டனர். அதை பார்த்து விமர்சனங்கள் மேலும் கடுமையாகி உள்ளது. அதாவது அந்தத் தொடர் வெளியான முதல் நாளே 2.4 மில்லியன் மக்கள் அதை பார்வையிட்டுள்ளனர். அதிலும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் மகாராணியாரின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட the crown என்னும் தொலைக்காட்சி தொடரும் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த தொடரை விட ஹரி, மேகனுடைய தொடரை அதிகம் பேர் பார்த்துள்ளனர்.