இன்று நடைபெற்ற ராமர்கோவில் பூமிபூஜை விழாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம் பரிசாக வழங்கப்பட்டது.
ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி வந்துசேர்ந்த பிரதமர் மோடி அங்குள்ள பத்தாம் நூற்றாண்டு கோயிலான அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம் பரிசாக வழங்கப்பட்டது. அவருடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ராம் நல்லா கிராஸ்மேன் என்ற குழந்தை ராமர் கோவிலில் இரவில் பூக்கும் மல்லிகை பூவான பாரிஜாத மலர் செடியை மோடி நட்டு வைத்தார்.