Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸில் அடுத்த கொடுமை… 6 வயது சிறுமி மரணம்…. உறவினரால் நேர்ந்த துயரம்…!!

ஹத்ராஸில்  6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். சிறுமியின் தாய் உயிரிழந்ததை தொடர்ந்து தனது உறவினர்களுடன் வசிக்க தொடங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து  விசாரிக்கையில் சிறுமியின் உறவினர் தான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் அந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிறுமியின் உடலை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதோடு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினருக்கும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத எஸ்பி-யை  பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் சமரசம் பேசப்பட்டது. ஹத்ராஸில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |