Categories
மாநில செய்திகள்

ஹஜ் பயணம்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!!!!

சென்னை சூளையில் அமைந்திருக்கும்  தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் ஹஜ்  பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே மஸ்தான் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மக்கள் தொகையின் அடிப்படையில் 1500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதற்கான 10 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கின்றது.

மேலும் இந்த வருடம் ஹஜ் பயணம் கேரளாவில் தொடங்க இருக்கின்றது. பயணம் மேற்கொள்வதற்கான உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து செலவையும்  அரசே ஏற்றுக்கொள்ளும். உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட இருக்கின்றது. அதன்படி 10,058 பேருக்கு அடுத்த மாதம் மிதிவண்டி வழங்கப்பட இருக்கின்றது. இந்நிலையில்  ஓய்வு பெற்ற உலமாக்கள் தங்களுக்கு வேண்டுமானால் 25,000ம் ரூபாய் மானியத்தில் இருசக்கர வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். ஓய்வு ஊதியம் பெறும் உலமாக்கள் இறந்து போனால் அவரது துணைவியாருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது.

மேலும் தகுதி உள்ள உலமாக்களுக்கு ஊதியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 3,000 உலக மக்களில் 1600 பேருக்கு தற்போது ஊதியம் வழங்கப்படுகின்றது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில் அடுத்த வருடம் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். புதிதாக ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு பிரதமர் முதல்வர் மற்றும் துறை அமைச்சர் என்ற முறையில் எனது பரிந்துரையின் அடிப்படையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார் அமைச்சர் மஸ்தான்.

Categories

Tech |