இந்தியாவை சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் விமான பயணத்திற்காக தாய்லாந்து விமான நிலையத்திற்கு சென்று இருந்தார். அப்போது அங்குள்ள பூகேட் விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான சோதனையில் ஒரு பகுதியாக இவரின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இவர் வைத்திருந்த குலாப் ஜாமுனை விமானத்தில் எடுத்துச் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
அதன் பிறகு தன்னிடம் இருந்த குலாப் ஜாமுனை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பினார்.இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் குலாப் ஜாமுனை வழங்கினார். அதனை மகிழ்ச்சியாக அதிகாரிகள் அனைவரும் சுவைத்து சாப்பிட்டனர். அவரின் இந்த செயலுக்கு அதிகாரிகள் உட்பட பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.