கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மாணவியின் மரண வழக்கு தொடர்பாக அவரது தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்துள்ளது.அதாவது மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை சிபிசிஐடி போலீஸ் யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பெற்றோருக்கு உத்தரவிட்டு உள்ளது.இதனைப் போலவே மாணவி மரணம் வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.