Categories
மாநில செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டம்”…. விசாரணைக் குழு அமைக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 5 மாத ஆட்சி காலத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 750 கிலோ மீட்டர் மட்டுமே திமுக ஆட்சியில் தூர்வாரபட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால் தி.நகரில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. மேலும் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது பல விதிமீறல் நடைபெற்றுள்ளது. ஆகவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |