சென்னை கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இதில் கமிஷனும் வாங்கியுள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு ஸ்மார்ட்சிட்டி காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை பாயும். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி மீதான ஊழல் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தற்போது நிலவரம் சரியான பிறகு இது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.