இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் ரூ.1500 நிதிஉதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது 1500 ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை நிதி உதவியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வானிலை தகவல்கள், பூச்சி மருந்துகள், நவீன பண்ணை தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள விவசாயிகள் ஸ்மார்ட் போன் வாங்குவது நல்லது என்று தெரிவித்துள்ளது.
Categories
ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!
