Categories
தேசிய செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென புகை…. 1 வாரத்திற்குள் இதை செய்து முடிங்க…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஐதராபாத் ஏர்போர்ட்டில் சென்ற வாரம், ஸ்பைஸ் ஜெட் கியூ-400 விமானம் ஒன்று கோவாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் இரவு 1 மணி அளவில் விமானமானது தரைஇறங்க தயாராகும் நேரத்தில் கேபினில் புகை ஏற்பட்டது. திடீரென்று கேபினுக்குள் புகை வருவதை பார்த்து அதிர்ர்சியடைந்த விமானி, உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானமானது ஏர்போர்ட்டில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

அதன்பின் அவற்றில் இருந்த 86 பேர் அவசரகால வழி வாயிலாக வெளியே இறங்கினர். அதனைதொடர்ந்து ஐதராபாத் ஏர்போர்ட்டில் தரை இறங்க வேண்டிய 9 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. இச்சம்பவம் பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் என்ஜினில் உள்ள எண்ணெய், விமானத்தின் குளிர்சாதன(ஏ.சி) அமைப்பில் நுழைந்து கேபினில் புகையை உண்டாக்குகிறது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து கியூ-400 விமான என்ஜின்களிலும் ஒரு வாரத்திற்குள் உரிய ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிசிஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க அனைத்து தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறை இந்த ஆய்வின்போதும், என்ஜின்களிலிருந்து சேகரிக்கப்படும் அனைத்து எண்ணெய் மாதிரிகளையும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் சோதனைக்காக கனடாவுக்கு அனுப்பவேண்டும்.

Categories

Tech |