உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசேவா தலைமையிலான குழு அடுத்த வருடம் தொடக்கத்தில் நிலவை சுற்றி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நடிகர் தேவ் ஜோஷி இதில் இடம் பெற்றுள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலவு பயணம்… இந்திய தொலைக்காட்சி நடிகர் தேர்வு … யார் தெரியுமா..??
