Categories
தேசிய செய்திகள்

ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு… மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்… அடித்து உதைத்த பெற்றோர்…!!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர்.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவர் மாணவிக்கு பாடங்களை கற்றுத் தருவதாக கூறி மாணவியை தொட்டுத்தொட்டு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த அந்த மாணவிடம் மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாக கூறி வகுப்பிலேயே அமர வைத்துள்ளார். அவர் கூறியதை நம்பிய அந்த மாணவியும் வகுப்பறையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து ஆசிரியர் விகாஸ் குமார் அந்த மாணவிக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் உடனடியாக அந்த மாணவி ஆசிரியரை தள்ளி விட்டு அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் இச்சம்பவம் அந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரை அடித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அந்த தகவலின்படி உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |