Categories
உலக செய்திகள்

ஸ்பெயின்: வெறும் 20 நாட்களில் 2 முறை பெண்ணை தாக்கிய கொரோனா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

ஸ்பெயின் நாட்டில் 31 வயது பெண்ணிற்கு 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஒரே நபருக்கு அடுத்தடுத்து 2 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரையிலும் அறியப்பட்ட குறைந்தபட்ச காலஇடைவெளி இதுவே என ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வில் சுகாதார பணியாளரான அப்பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா திரிபாலும், ஜனவரியில் ஒமிக்ரான் திரிபாலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் வாயிலாக ஒரு நபருக்கு முன்பே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அல்லது முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அப்பெண்ணுக்கு முதன் முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோது எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. அதனை தொடர்ந்து சுமார் 3 வாரங்களுக்கு பின் அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர் வெவ்வேறுபட்ட கொரோனா திரிபால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

Categories

Tech |