Categories
மாநில செய்திகள்

ஸ்பிரே கோட்டிங்கில் தொழில் நுட்பத்தில் புதிய முயற்சி…. பயிற்சி எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் பாலப்பூரில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்ட அமைப்பான தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட டெட்டனேஷன் ஸ்பிரே கோட்டிங் மற்றும் குளிர்ந்த வாயு ஸ்பிரே தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் வர்த்தக பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. மின்சாரம், விண்வெளி, பெட்ரோலியம் அல்லது எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்புடைய பல்வேறு துறைகளில் பூச்சு தொழில் நுட்பத்தில் புதிய அணுகுமுறைகளை பின்பற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொழில்நுட்பத்துடன் கூடிய பூச்சு நடைமுறை மையம் செய்து வருகின்றனர்.

இதன் நோக்கமாக பல்வேறு தொழில்துறையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களுக்கு பூச்சு நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதில் துருப்பிடிக்காமல் இருப்பதற்கும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடையாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை நல்ல பலனை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் புதிய பொருட்கள் மற்றும் பழுது நீக்கி சரி செய்யப்படும் பொருட்களுக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த தொழில் முனைவோர்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் சிறந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்வதற்கு கட்டணம் ஏதும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கலந்து கொள்ள விரும்புவர்கள் முன்னரே அல்லது என்ற இமெயில் மூலமாகவோ அல்லது என்ற லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

Categories

Tech |