Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஸ்டைலாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் ஹன்சிகா… புத்தகத்தைப் புரட்டும் புதுமையே… புகழும் ரசிகர்கள்…!!!

 நடிகை ஹன்சிகா லைப்பரியில் புத்தகத்தை படிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான மகா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து ரிலீஸாகவுள்ளது. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா.

சிம்புவுடன் வாலு திரைப்படத்தில் நடித்த ஹன்சிகா காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதனால் சிம்புவின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது இவரின் 50ஆவது திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடிக்கிறார். இந்நிலையில் ஹன்சிகா லைப்ரரியில் புத்தகத்தை படிக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் புத்தகத்தை புரட்டும் புதுமையே என பாசிட்டிவான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இவர் தற்போது 105 மினட்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் 105 நிமிடங்கள் ஹன்சிகா தொடர்ந்து ஷாட்டில் நடிக்கிறார். மேலும் மை நேம் ஸ்ருதி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் ஹன்ஷிகா குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |