இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
T 20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி என்ற பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வர, ஆசிரியை நபீசா அட்டாரியை பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பியதாக கூறி பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.