வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூறிய அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்தது. இந்த மனுவை தற்காலிகமாக திறக்ககூறி வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை டிசம்பர் இரண்டாம் தேதி தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வழக்கமான செயல்பாடுகளில் நீதிமன்றத்தின் போது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இதற்கு இடையே மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.ஆனால் நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து. மேல்முறையீடு மனு ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.