Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் அனுமதியை நீட்டிக்க கோரி… உச்சநீதிமன்றத்தில் மனு…!!!

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் பரவி வந்த இரண்டாம் அலை காரணமாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, அதில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இது தமிழக அரசு கடந்த மே மாதம் முதல் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியிருந்தது.

இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன்களை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் என தெரிவித்திருந்தது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மாதத்துடன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் நிலையில் மேலும் கூடுதல் அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளது.

Categories

Tech |