Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு ரூ.3 கோடி வீணடித்தது ஏன்…? கடுமையாக சாடிய EPS..!!!

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு திமுக அரசு ரூ. 3 கோடியை வீணடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசு, கடந்த 19 ஆம் தேதி அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் நம்ம ஸ்கூல் என்று நாம கரணம் சூட்டி முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அதை தொடங்கி வைத்துள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் எளிமையாக தொடங்கப்பட்ட அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இந்த திட்டத்தின் பெயர் மாற்றம் செய்து நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் மூன்று கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வெளிவந்துள்ளது. அரசின் நிதிநிலை ஏற்கனவே தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு மூன்று கோடி ரூபாயை ஸ்டிக்கர் ஒட்ட வீணடித்தது ஏன்? குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |