Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வாழ்த்து சொல்லல…! இது ஒரு நவீன தீண்டாமை… மத்திய அமைச்சர் விமர்சனம் …!!

முதல்வர் முக ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இதை நவீன தீண்டாமை என தான் பார்ப்பதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் 12 அடி உயரம் கொண்ட 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலையை அதனருகே நிறுவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை இராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தொலைக்காட்சி வாயிலாக கண்ட எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உலகம் முழுவதும் இருக்கிற இந்துக்கள், தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

ஆனால் முதலமைச்சர் முக. ஸ்டாலின் தீபாவளி கொண்டாடிய தமிழக மக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது எனவும்,  நவீன தீண்டாமையாக இதை பார்ப்பதாகவும் அவர் கூறினார் மேலும் தமிழக முதலமைச்சர் தானாக முன்வந்து பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |