Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வர மாட்டாரு…! நாங்கள் தான் வரணும்…. திமுகவிருக்கு பாஜக திடீர் அழைப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மதமாற்ற தடை சட்டம் வருகின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும். மாநிலத்தினுடைய அரசாங்கத்தை நிர்பந்திக்கின்ற வகையில் அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். ஏனென்றால், எல்லா உயிரிழப்பும் உயிரிழப்பு தான். ஆனால் மணப்பாறையில் அப்பா போட்ட போர்வெல்லில் குழந்தை விழுந்து இறந்து போச்சு…

ஸ்டாலின் ஓடுனார், கனிமொழி, உதயநிதி ஓடுனாங்க, அந்த குடும்பத்திற்கு கட்சியில் இருந்தே பணம் கொடுத்தார்கள் ஏன் இன்னும் ஸ்டாலின் இங்கே வரல.அதனால் அந்த குடும்பத்தினர் 1 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கணும்.  இந்து முன்னணி சார்பாக மாநில முழுவதும் பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் எல்லா உணர்வாளர்களும், மனித தன்மை இருப்பவர்கள்….

ஏனென்றால் இந்த குழந்தை தகப்பனார் வந்து லாவண்யாவின் தகப்பனார் திமுகவை சேர்ந்தவர், ஆனால் ஸ்டாலின் வரல…  நாம வந்திருக்கிறோம். ஏனென்றால் மனிதாபிமானம், மனித பண்பு என்பது இந்துக்களுக்கு இருக்கு. இந்து விரோதிகளுக்கு இல்லை. அதனால இதுல எல்லாரும் கலந்துகொள்ள வேண்டும். திமுகவில் இருக்கின்ற இந்துக்களுக்கும் சொல்கிறேன்… உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்க தான் வருவோம், ஸ்டாலின் வரமாட்டார். அதனால் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

வீடியோ எடுத்தவரை ஒண்ணுமே செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கு. அதனால் அவர்கள் இப்போ தான் அறிவித்திருக்கிறார்களே…  காவல்துறையினர் அதில் பங்கு பெறுவதற்கு அனுமதிக்கிறார்களா ? இல்லையா நீதிமன்றத்தை காவல்துறை மதிக்குதா, மதிக்கவில்லையா ? என்ன செய்கிறார்கள் என்பதை நீதிமன்றம் பார்த்துகொண்டு இருக்கும் என்று நம்புறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |