திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பூச்சி முருகனின் மகள் திருமண விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர் நான் பூச்சி முருகனை “முருகன்” என்று தான் அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது எனக்கு தனி பாசமும், அன்பும் உண்டு என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் முதல் முதலமைச்சர் என்பதை விட நம் தமிழகம் முதல் மாநிலமாக வருவது தான் என்னுடைய ஆசை.
மேலும் அழகான தமிழ் பெயரை தான் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும். என்னுடைய குடும்பத்தில் தமிழ் பெயர் தான் அனைவருக்கும். ஆனால் அதில் எனக்கு மட்டும் காரண பெயர். எனக்கு என் தந்தை கருணாநிதி அய்யாத்துரை என பெயர் வைக்க ஆசைப்பட்டார். ஏனென்றால் “அய்யா” என்பது தந்தை பெரியாரையும், “துரை” என்பது அண்ணாதுரையையும் குறிக்கும் என்பதால்.
ஆனால் கருணாநிதி சோவியத் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற போது ஒருவர் அவருக்கு துண்டு சீட்டு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த சீட்டில் “உங்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது கருணாநிதி எனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைப்பதாக அந்த கூட்டத்திலேயே அறிவித்துவிட்டார்” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.