தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக முன்னிலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.