2024 ஆம் ஆண்டு மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வருமா என்ற கேள்விக்கு, அதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.இதை வைத்து பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதை அவர் மறைமுகமாக கூறுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
குஜராத் மாடல்,டெல்லி மாடல் மற்றும் திராவிட மாடல் என பல்வேறு மாநிலங்களில் பல மாடல்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வரும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்ததன் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக யார் ஆட்சி அமைத்தாலும் அதில் திமுக பங்கு முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.