செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு சரியான வடிகால் வசதி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார், உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கிறார், பொய்யான செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல ஆவடி, பூந்தமல்லி பகுதியில் கூவம் நதி சீரமைப்பு, பூந்தமல்லி பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுத்து நெடுஞ்சாலை துறை மூலம் கால்வாய் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
அப்பகுதியில் கூவம் ஆறு தூர்வாரப்பட்டு இருகின்றன. பூந்தமல்லி பகுதியில் இருந்து வெளிவருகின்ற தண்ணீர் மாங்காடு வழியாக சென்று, தந்தி கால்வாயினை அடைய பல்வேறு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் நீர் ஊருக்குள் போகாமல் தடுத்திட நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைகளில் இருபுறமும் வடிகால் அமைத்து உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாண்புமிகு அம்மாவுடைய அரசிலே இருந்தபொழுது….. அதேபோல அடையாறில் பெருவெள்ளம் வருகின்ற போது அது தடுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை அம்மாவுடைய அரசு எடுத்தது. சிறிய கால்வாய் போலிருந்த அடையாறு ஆதனூர் முதல் திருமுடிவாக்கம் வரை ரூபாய் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாக அகலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. அவ்வாறு அகலப்படுத்தும் போது அடையாற்றில் ஏற்கனவே இருந்த சிறிய பாலங்கள், குறிப்பாக வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள ரூபி பில்டரில் அருகில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
கர்காஸ் சாலை பாலம் முடிச்சூர் பெருங்குளத்தூர். வரதராஜபுரம் அட்டை கம்பெனி அருகில்… திருமுடிவாக்கம் போன்ற பாலங்கள் ரூபாய் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரிய பாலங்களாக கட்டப்பட்டு தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்த அரசு அம்மாவுடைய அரசு. அடையாறுக்கு வரும் தண்ணீரை சேமித்து வெள்ள பெருக்கினை தடுத்திட கொளத்தூர் மற்றும் ஆரப்பாக்கம் ஆகிய 2 ஏரிகளையும் ஒருங்கிணைத்து ரூபாய் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கிட அனுமதிக்கப்பட்டு, தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி உபரி நீர் கால்வாய் மற்றும் ஆதனூர் கால்வாய் அருகே உள்ள அடையாற்றின் ஆரம்பப் பகுதியை சீரமைத்து, முறையான ரெகுலேட்டர் மற்றும் அதன் அருகே ஒரு பாலம் அமைத்து ஆதனூர் பகுதியில் சுமார் இருபது நகர்புற குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்பட்டது, அதையும் அம்மாவுடைய அரசுதான் செயல்படுத்தியது.
தாம்பரம் மேற்கு பகுதியில் உள்ள சுமார் 17 குடியிருப்பு நகர் பகுதிகள் சக்தி நகர், பாரதி நகர்,கண்ணன் அவன்யூ, குடவியல் நகர் உள்ளிட்டவை 2015 மற்றும் 2017 வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து அப்பகுதியில் பூமிக்கு அடியில் வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டது. தற்போதைய மழையில் இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் அடையாற்றுக்கு சென்று விட்டது, அப்பணியும் அம்மாவுடைய அரசுதான் செயல்படுத்தியது.
செட்டில்பாக்கம் பேரூராட்சி பகுதி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து வீடுகளும் தண்ணீர் புகுவதை தடுத்திட ரூ 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமிக்கு அடியில் வடிகால் அமைக்கப்பட்டு தற்போது மழையால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் வெளியேறி இருக்கின்ற நிலை இன்றைக்கு அம்மாவுடைய அரசுதான் ஏற்படுத்தியது.
தாம்பரம், பல்லாவரம் பகுதியில் பல்வேறு துறையின் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் தங்குதடையின்றி கோவிலம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு இடையே உள்ள நாராயணபுரம் ஏரியினை சென்றடைய வழிவகை செய்யப்பட்டது அம்மாவுடைய ஆட்சியிலே…
அம்மாவுடைய அரசு செயல்படுத்தியது. மேலும் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல கீழ்கட்டளை ரேடியல் சாலை இருபுறம் பூமிக்கு அடியிலான கால்வாய் அமைக்க அனுமதிக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணி செயல்படாமல் இருந்தால் கோவிலம்பாக்கம், கவிதபுரம், கீழ்கட்டளை போன்ற பகுதியில் இம்முறையும் முழுவதும் தண்ணீரால் பாதிக்கப்பட்டிருக்கும். இத்திட்டத்திற்கு மட்டும் 129 கோடி ரூபாய் அம்மாவுடைய அரசு அந்தப் பணி துவக்கப்பட்டது.