Categories
தேசிய செய்திகள்

“ஸ்டார்ட் அப்” நிறுவனத்தின் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்கள்…!!!!!

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு  எதிரான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், உயிரி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மைன்வாக்சும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றனர். இந்த தடுப்பூசியை குளிர்சங்கிலி வசதியில் வைத்து பாதுகாக்கஅவசியமில்லை. இது ஒரு ‘வெப்ப நிலை’ தடுப்பூசியாகும். மேலும் இந்த தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 90 நிமிடங்கள் வைத்து பயன்படுத்த முடிகிறது.

இந்நிலையில் இந்த தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிகள் டெல்டா, ஒமைக்ரான் போன்ற  உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தியை பெறுவது தெரிய வந்திருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், பைசர் தடுப்பூசிகளை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வைத்து பாதுகாக்கவேண்டும். இந்த தடுப்பூசி பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

Categories

Tech |