Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட அதிமுக…. சூடுபிடிக்கும் தேர்தல் தர்பார் … 5 பக்க அதிரடி அறிக்கை …!!

அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னேற்பாடாக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்கட்சியான திமுக ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐபேக் என்ற நிறுவனத்தோடு தேர்தல் பணியினை செய்ய துவங்கிவிட்டது. தமிழக முதலமைச்சரும் மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்து இருந்த நிலையில்,  தற்போது தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை செய்து தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம்,  துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை… கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கழகப் பணியை விரிவுபடுத்தும் வகையில் சில மாவட்டங்களை கழக அமைப்பு ரீதியாக பிரிதல்  என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள.

இந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாக வசதியினை கருத்தில் கொண்டும், கழகப் பணியை விரிவு படுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சில மாவட்டங்களை கீழ்கண்டவாறு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு… பின் வரும் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்…. மாவட்ட கழக செயலாளர் கீழ்க்கண்டவாறு கீழ்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப் படுகிறார்கள் என்றும் தெரிவித்து 5 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |