Categories
அரசியல்

ராக்கெட் ராஜா போட்ட ஸ்கெட்ச்?…. ‘ஜெயிலில் அலறும் ஹரி நாடார்’…. திடீர் பரபரப்பு….!!!!

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹரி நாடார் அண்மையில் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி பின்னர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற ஹரிநாடாரின் மனைவி ஷாலினி புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த புகார் மனுவில், “ஹரி நாடார் கடந்த 5.12.2011 அன்று என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது எங்கள் இருவருக்கும் வசதி எதுவும் கிடையாது. ஆனால் மகன் பிறந்த பிறகு சமுதாய கட்சியில் சேர்ந்ததால் தன்னுடைய கணவருக்கு பைனான்ஸ் பழக்க வழக்கம் ஏற்பட்டு வசதிகள் கூடியது.

அதன் பிறகு அவருடைய போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டு தனக்கும், தனது மகனின் படிப்பிற்கும் கடந்த சில வருடங்களாக பணம் எதுவும் தராமல் இருந்து வந்தார். அதோடு மட்டுமில்லாமல் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து செய்வதற்காக ஹரிநாடார் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் நான் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியிருந்தேன்.

இதற்கிடையே மஞ்சு என்ற பெண் மலேசியாவில் இருந்து தன்னை தொடர்பு கொண்டு ஹரி நாடார் தனது கணவர், இருவருக்கும் தற்போது 2 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்து வழக்கில் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் எனக்கு பலமுறை செல்போனில் கொலை மிரட்டல் வருவதாகவும்” ஷாலினி மனுவில் கூறியிருக்கிறார்.

எனவே தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் மஞ்சு மற்றும் அதற்கு தூண்டுகோலாக இருக்கும் ஹரிநாடார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷாலினி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஹரி நாடார் தன் கட்சியினர் தான் ஷாலினியை தூண்டிவிட்டு அதன்மூலம் தனக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக கூறியிருந்தார்.

அதனை உறுதி செய்யும் வகையில் பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கட்சியிலிருந்து ஹரிநாடாரை நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில் ஷாலினியும் இந்த புகார் மனுவை வழங்கியுள்ளார். இதன் மூலம் ராக்கெட் ராஜா தான் சிறையில் இருந்து தன்னை வெளியே வர விடாமல் தனக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார் என்று ஹரி நாடார் சிறையில் நெருங்கிய கைதிகளிடம் கூறி ஆவேசம் அடைந்துள்ளார்.

Categories

Tech |