காட்டு யானை ஸ்கூட்டர் மற்றும் ஜீப்பை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் நேற்று காலை பாலம்வயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது விஸ்வநாதன் என்ற கூலி தொழிலாளி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் யானை வருவதை பார்த்த விஸ்வநாதன் ஸ்கூட்டரை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனை அடுத்து காட்டிய யானை ஸ்கூட்டரை தூக்கி வீசி உடைத்து சேதப்படுத்தியது. மேலும் சாலையில் நின்ற ஈஸ்வரன் என்பவரது ஜீப்பை தந்தத்தால் குத்தி சேதப்படுத்திவிட்டு காட்டு யானை தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.