கிரைம் திரில்லர் படமான “மெட்ரோ” திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானவர் ஷிரிஷ். இவர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் இப்போது நடித்திருக்கும் படம் “பிஸ்தா”. ஒன் மேன் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தரண் குமார் இசையமைத்து இருக்கிறார். அத்துடன் எம்.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தில் செந்தில், யோகிபாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சென்ட்ராயன், நமோ நாராயணா உள்ளிட்ட பல பேர் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் “பிஸ்தா” படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.