Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷாஹீன் அஃப்ரிடிக்கு பயமா?….. யாருக்கு நிம்மதி….. பாக்.வீரருக்கு தரமான பதிலடி கொடுத்த இர்பான் பதான்..!!

பும்ராவும், ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்விட் செய்துள்ளார்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றது. அதன் பின் 28 ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது. இந்தப் போட்டியை எதிர்நோக்கி தான் கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். முன்னதாக காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக இந்த ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பாகிஸ்தான் அணியின் சிறந்த முதன்மை பந்துவீச்சாளரான அஃப்ரிடி விலகி இருப்பது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக  பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி இந்த ஆசிய தொடரில் இருந்து விலகி உள்ளதால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி ஆசியக்கோப்பையில் அவரைப் பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் நக்கல் செய்யும் விதமாக கூறி இருந்தார்..

 

இந்நிலையில் இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பும்ராவும், ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி! என்று பதிவிட்டுள்ளார்.. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் அணியில் இருந்து அஃப்ரிடி விலகியதால் இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், அதற்கு இந்திய ரசிகர்கள் அப்படி என்றால் அஃப்ரிடியை  தவிர பாகிஸ்தான் அணியில் எந்த பவுலரும் திறமை இல்லாதவரா? என்று பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |