சென்ற சில வாரங்களாக தீவிர கொரோனா பரவலைக் கண்டுவரும் சீனாவின் வா்த்தக மையமான ஷாங்காய்நகரில் மேலும் 8 போ் பலியாகினா். இதனால் புதிய அலையில் அந்நகரின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 25ஆக உயா்ந்துள்ளது.
இதை தவிர்த்து வேகமாகப் பரவும் ஒமிக்ரான் வகை கொரோனா காரணமாக நாடு முழுதும் புதிதாக 19,300-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களில் ஏராளமானவர்கள் ஷாங்காய் நகரில் வசிப்பவா்கள் ஆவர். அந்நகரில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவா்களில் 62 % போ் மட்டுமே மட்டுமே செலுத்திக் இருப்பதால் கொரோனா மரணங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.