Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை கொன்று குவித்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திகுல் என்ற கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன. இதையடுத்து கொல்லப்பட்ட தெரு நாய்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அதிகாரி மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் இது தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த கிராமத்தில் சுமார் 200 தெரு நாய்கள் கடந்த 3 மாதங்களில் கொல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |