Categories
சினிமா

“ஷாக் கொடுத்த நயன் மற்றும் விக்கி”…. என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே… கவலையில் ரசிகர்கள்…!!!

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் நீண்ட வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இவர்கள் எங்கு சென்றாலும் எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் வசம் நிறைய திரைப்படங்கள் உள்ளதால் தற்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரியவருகின்றது.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் எப்போது நடக்கும் என சொல்கிறோம் என விக்னேஷ்சிவன் கூறியிருந்தநிலையில் திருமணத்துக்கு தற்போது வாய்ப்பே இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை மணக்கோலத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |