டெல்லி ஷாகீன் பார்க் போராட்டக்காரர்களுடன் டெல்லி வழக்கறிஞ்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 67 நாட்களாக இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உச்சநீதிமன்றம் குழு அமைத்து பரிந்துரை செய்தது.
இந்நிலையில் ஷாகீன் பாக் போராட்டகாரர்களுடன் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞ்சர்கள் சஞ்சய் ஹெக்டே , சாதனா இராமச்சந்திரன் மற்றும் வஜாஹத் ஹபுல்லா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.