ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண் தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராம் சரணின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ராம்சரண் இளம் அரசியல் தலைவராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ‘விஸ்வம்பரா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. விஸ்வம்பரா என்றால் பூமி என்று அர்த்தம். விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.