Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் மகளிடமேவா?…. “உங்களுக்கு தில்லுதான் பாஸ்”…. பிரபல நடிகரை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்….!!!!

இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான பிரேம் அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், துணை நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களில் வலம் வருகிறார். ஆனால் 42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. இதனால் பிரேம்ஜி தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவுகளையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் பிரேம்ஜி சக நடிகர்களையும் கேலி கிண்டல் செய்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர் ஷேர் செய்துள்ள புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளார். அதாவது முத்தையா இயக்கத்தில் தயாராகி வரும் ‘விருமன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமாகும் அதிதி சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில் அதிதி ஷங்கர் கருப்பு நிற உடையில் ஷேர் செய்த போட்டோவை பார்த்த பிரேம்ஜி அவரை ஜொள்ளு விடும் விதமாக வாயை பிளக்கும் GIF வீடியோவை ஷேர் செய்து அவருடைய புகைப்படத்திற்கு ரியாக்ட் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “ஷங்கர் மகளிடமேவா ? உங்களுக்கு தில்லு தான் பாஸ்!” என்று கூறி கமெண்ட் செய்துள்ளனர்.

Categories

Tech |