ஷகிலா பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகைக்கு பேர் போனவர் சில்க் ஸ்மிதா. அவரின் இடத்தை இன்றளவும் யாராலும் பிடிக்க முடியவில்லை. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் இருந்து வருகின்றது. அவர் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் அவரை கனவுகன்னியாகவே பார்த்தனர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு டர்டி பிக்சர்ஸ் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை வித்யாபாலன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்திருப்பார். உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சில காட்சிகள் மட்டும் மாற்றி அதில் ஷகிலாவின் வேடத்தில் ஒரு நடிகை நடித்திருப்பார். அந்த காட்சியில் சகிலா ஒருவருடன் படுக்கையறையை பகிர்ந்துகொண்டு வெளியே வருவார்.
ஒரு அக்காவாக நடித்த சில்க் ஸ்மிதா இப்படி எல்லாம் பண்ணுவியா என்று கண்டிக்கும் விதமாக ஷகிலாவின் கன்னத்தில் அறையும் காட்சிகள் இடம் பெற்றது. இதுபற்றி பேட்டியளித்த ஷகிலா கூறியுள்ளதாவது, ஒரு படத்தில் ஸ்மிதாவுடன் நடிக்கும் சூழல் ஏற்பட்ட போது என்னை சில்க் ஸ்மிதா கன்னத்தில் அறையும் காட்சி இடம் பெற்றது. இந்த காட்சி எடுப்பதற்கு முன்னால் சில்க்ஸ்மிதாவிடம் நீங்கள் மெதுவாக அடிப்பீர்களா, இல்லை பலமாக அடிப்பீர்களா என கேட்டபோது மெதுவாகத் தான் அடிப்பேன் என கூறினார்.
ஆனால் படப்பிடிப்பின் போது அவர் என்னை பலமாக அறைந்தார். இந்த காட்சி முடிந்தவுடன் டைரக்டரிடம் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு கிளம்பி விட்டேன். படத்தில் காட்டியது போல் ஸ்மிதா என்னிடம் எதுவும் கூறவில்லை. படத்திற்காக அதுபோன்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அது உண்மையில்லை என கூறியுள்ளார் ஷகிலா. சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்தபடியாக ஷகிலா கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர். இந்நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சாகிலா அம்மாவாக பிரபலமான நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார் குறிப்பிடத்தக்கது.