‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியர் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன் . இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சு வாரியர் .
BE YOUR OWN WONDER WOMAN 😊 https://t.co/j79hAEUzWu
#FashionmongerAchu#ArunMathew#manoramaonline#manoramacalendar pic.twitter.com/6AKGZSD1TK— Manju Warrier (@ManjuWarrier4) June 21, 2021
இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியாரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் வொண்டர் வுமன் தீமில் வேட்டை நாயுடன் செம கெத்தாக போஸ் கொடுத்து மஞ்சுவாரியர் நிற்கிறார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.