அடுத்த மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருப்பதால் அந்நாட்டு அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் பீஜிங்குக்கு அருகில் உள்ள துறைமுக நகரமான தியான்ஜினில் வசிக்கும் மொத்த மக்களுக்கும் அதாவது சுமார் 1 கோடியே 40 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக நேற்று மொத்தம் உள்ள 16 மாவட்டங்களில் முழுமையான பரிசோதனை 4 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மீதம் உள்ள 12 மாவட்டங்களில் பரிசோதனை நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.